top of page
To see this working, head to your live site.
மலேசிய சைவப் பேரவை மாநாடு 30.7.2023
Malaysia Saiva Peravai Conference at Nilai University 30.7.23
மலேசிய சைவப் பேரவை மாநாடு 30.7.2023
Malaysia Saiva Peravai Conference at Nilai University 30.7.23
1 answer0 replies
Like
1 Comment
bottom of page
இந்த மாநாட்டில் என் பேச்சின் தலைப்பு:
"சைவ சித்தாந்தத்தில் குரு- இலக்கும் இலக்கணமும்".
நல்ல சமய குரு எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியும், யார் போலி குரு என்பது பற்றியும் திருமுறை விளக்குகிறது.
சிவபெருமானுக்கு இணையாகவோ மாற்றாகவோ எந்த குருவும் கிடையாது. சிவபெருமான் அருள்பெற்ற சிறந்த குருமார்கள், நம்மை நல்வழியில் நடத்துவார்கள் என்று திருமந்திரம் விளக்குகிறது. நால்வர் பெருமக்கள் நமக்கு நல்ல வழி காட்டும் குரு ஆவர். அவர்களுடைய திருமேனிகளைப் புகழ்பெற்ற கோவில்களில் காணலாம். சிவ பக்தியை வளர்த்து மக்களுக்கு உயர்வுதரவல்ல 63 நாயன்மார் சிலைகளைக் கோவிலில் காண்பது பொருத்தமே. ஆனால், பல இந்துக் கோவில்களில் தேவையில்லாமல் மற்ற இன மனிதர்களின் சிலைகளை வைக்கிறார்கள். இதுதான் இன நல்லிணக்கம் என்றும் சொல்கிறார்கள். இது சரிதானா என்ற கேள்வி மாநாட்டின்போது எழுப்பப்பட்டது. பிற இனங்களை மதிப்பது சரி. ஆனால் கோவில்களின் அமைப்பைக் கெடுத்துதான் ம்ரியாதை காட்டவேண்டுமா? அது ஏமாற்று வேலை இல்லையா? மற்ற மதங்களை இந்துக்களிடையே திணிக்கும் முயற்சி இல்லையா இது? இந்தத் திணிப்பால் எந்த நன்மையும் விளையாது. சிவலிங்கத்தின் பக்கத்திலேயே அந்த மாற்றுமத மனிதரின் சிலையை வைக்கும்போது சிவபெருமானை வணங்க வரும் பக்தர்களின் மனம் புண்படாதா? இதைப் பற்றி உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சிவாய நம.